ஒற்றை ஆளாய் தர்ணாவில் ஈடுபட்ட கவுன்சிலரால் பரபரப்பு! DMK Lady Counselor | Aanaimalai | Covai
ோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலையை சேர்ந்தவர் சாந்தி. திமுகவை சேர்ந்தவர். இவர் ஏழாவது வார்டு கவுன்சிலராக உள்ளார். பேரூராட்சி நிர்வாகம் இவரது வார்டில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரவில்லை என புகார் கூறி உள்ளார். பேரூராட்சி வரும் நிதியை நிர்வாகம் முறையாக பிரித்து கொடுப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதனை கண்டித்து ஒற்றை பெண்ணாக திரவுபதி அம்மன் கோயில் சாலையில் சாந்தி தர்ணாவில் ஈடுபட்டார். திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொள்ளாச்சி எம்பி தனது வார்டுக்கு வந்து பார்வையிட்டு, அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார். போலீசார் மற்றும் திமுகவினர் அவரிடம் சமாதான பேச்சு நடத்தியதையடுத்து அவர் போராட்டத்தை கைவிட்டார்.