உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுக எம்பி ஆபிசில் லேப்டாப் உள்ளிட்டவை திருட்டு! | DMK office loot case | Theni DMK | Theft

திமுக எம்பி ஆபிசில் லேப்டாப் உள்ளிட்டவை திருட்டு! | DMK office loot case | Theni DMK | Theft

திமுக மாவட்ட அலுவலகத்தில் பூட்டை உடைத்து கொள்ளை! மோப்பநாயுடன் சல்லடை தேனி நகரின் மையப் பகுதியான என்.ஆர்.டி நகரில் திமுக வடக்கு மாவட்ட மற்றும் வடக்கு நகர அலுவலகம் ஒரே கட்டடத்தில் இயங்கி வருகிறது. தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன், வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் வடக்கு நகர் கழக செயலாளர் இதை தங்கள் அலுவலகமாக பயன்படுத்துகின்றனர். இந்தசூழலில் இன்று காலை வழக்கம் போல அலுவலகத்தை திறக்க சென்ற போது பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன. லேப்டாப்புகள் உள்ளிட்ட சில பரிசு பொருட்களும் திருடப்பட்டு இருந்தது. தேனி எஸ்பி சிவப்பிரசாத் நேரில் ஆய்வு செய்தார்.

ஜன 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை