உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பஸ் இல்லாமல் பல மணி நேரம் காத்திருந்த பயணிகள்! |DMK women's conference |Government buses|Palladam

பஸ் இல்லாமல் பல மணி நேரம் காத்திருந்த பயணிகள்! |DMK women's conference |Government buses|Palladam

பல்லடத்தில் திமுக மகளிரணி மாநாடு நேற்று நடந்தது. பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து கட்சியினர், மக்கள் அழைத்து செல்லப்பட்டனர். பெண்களை சுடிதார், புடவை என திமுக கட்சி நிற உடையில் அழைத்து சென்றனர். இதற்காக பெரும்பாலும் அரசு பஸ்களே பயன்படுத்தப்பட்டன. கிராமப்புறங்கள், புறநகர் செல்லும் பஸ்கள் திருப்பி விடப்பட்டன. பஸ் ஸ்டாண்டில் பஸ் இல்லாமல் பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. ஆளுங்கட்சியாக திமுக இருப்பதால் மாநாடு, முதல்வர் பங்கேற்கும் விழா என்றால் அரசு பஸ்களை பயன்படுத்துவது வழக்கமாகிவிட்டது. நேற்று நடந்த மாநாட்டுக்கு அரசு பஸ்களில் கட்சி கொடியை கட்டி அழைத்து சென்றதால் பலர் பஸ்கள் கிடைக்காமல் காத்திருந்தனர். அரசு பஸ்களை கட்சி நிகழ்ச்சிக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என ஆர்வலர்கள் கூறினர். தொடர் விடுமுறை, புத்தாண்டு காரணமாக வெளியூர் செல்ல ஆயிரக்கணக்கான மக்கள் உடுமலை பஸ் ஸ்டாண்ட்டில் நேற்று காலை முதல் காத்திருந்தனர். நீலகிரியிலும் அரசு பஸ்கள், பல்லடம் திமுக மாநாட்டிற்காக அனுப்பப்பட்டதால் உள்ளூர் பயணிகள் 2 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து அவதிக்குள்ளாகினர். நீலகிரியில் 165 பஸ்கள் மட்டுமே இயக்கப்படும் நிலையில் 30க்கும் அதிகமான அரசு பஸ்கள் கட்சியினரை அழைத்து செல்ல கொண்டு செல்லப்பட்டதாக குன்னூர் மக்கள் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன் கூறினார். உங்களை நம்பி வாக்களித்து ஆட்சி கட்டிலில் அமர்த்தியதற்கான விலையை இன்று மக்கள் தினமும் அனுபவித்து வருகின்றனர். நிரந்தரமாக வீட்டிற்கு செல்ல வேண்டிய நாள் இனி வெகுதூ

டிச 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை