உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விஜய் பக்கம் இளைஞர்கள் செல்வதை தடுக்க திமுக திட்டம் | TVK | TVK Vijay | DMK

விஜய் பக்கம் இளைஞர்கள் செல்வதை தடுக்க திமுக திட்டம் | TVK | TVK Vijay | DMK

விக்கிரவாண்டியில் நடந்த தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டில் திமுகவை தாக்கி பேசினார் விஜய். இதையடுத்து கட்சி செயற்குழுக் கூட்டம் சென்னையில் நவம்பர் 3ல் நடந்தது. திமுகவை வீழ்த்த வேண்டும் என்கிற இலக்குடன் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விஜய் தீவிரமாக திமுகவுக்கு எதிர்ப்பாக கிளம்பியதால் அக்கட்சி தலைமை அதிர்ச்சி அடைந்தது. யார் புதிய கட்சி துவங்கினாலும் திமுகவை அழிக்க வேண்டும் என்கின்றனர். தேவையில்லாமல் அவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என ஸ்டாலின் மறைமுகமாக விஜயை சாடினார். தவெக மாநாட்டிற்கு கூட்டம் கூடியது போல எங்களுக்கும் கூட்டம் வரும் என்பதை காட்ட திமுக தரப்பு முடிவு செய்தது. முதல்வர் ஸ்டாலின் கோவையிலும், துணை முதல்வர் உதயநிதி விழுப்புரத்திலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இருவரையும் வரவேற்க கட்சியினர் தடபுடல் ஏற்பாடுகளை செய்தனர்.

நவ 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை