/ தினமலர் டிவி
/ பொது
/ கவர்னர் பவரை பறித்த சட்டம்: திமுக அரசுக்கு தடை | vice chancellor appointment case | dmk vs governor
கவர்னர் பவரை பறித்த சட்டம்: திமுக அரசுக்கு தடை | vice chancellor appointment case | dmk vs governor
தமிழக அரசு, சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் நிறுத்தி வைத்ததாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடுத்து இருந்தது. இதை விசாரித்த கோர்ட், தனக்கு உரிய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, கவர்னர் நிறுத்தி வைத்திருந்த 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது. பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை கவர்னரிடம் இருந்து பறித்து முதல்வருக்கு வழங்கும் மசோதாவும் இவற்றில் ஒன்று. ஒப்புதல் பெறப்பட்ட 10 மசோதாக்களும் அரசிதழில் வெளியிடப்பட்டு, உடனடியாக நடைமுறைக்கு வந்தன.
மே 21, 2025