சமையல் பொருட்களுக்கு 50% வரி; அக்டோபர் 1 முதல் அமல் | Donald Trump |tariff | pharmaceutical drugs
அக்டோபர் 1 முதல் இறக்குமதி செய்யப்படும் பிராண்டட் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கு 100% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார். இந்த வரி விதிப்பிலிருந்து விலக்கு பெற சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனங்கள் அமெரிக்காவில் உற்பத்தி ஆலைகளை நிறுவ வேண்டும். ஏற்கனவே அங்கு ஆலை வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு இந்த வரி கிடையாது. கட்டுமானப் பணிகள் தொடங்கிவிட்டால், மருந்துப் பொருட்களுக்கு வரி விதிக்கப்படாது எனவும் கூறப்பட்டு உள்ளது. இதனால் அமெரிக்க சுகாதாரத்துறை பாதிப்புகளை சந்திக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. அதே நேரம் இந்த புதிய வரி விதிப்பு இந்திய மருந்து தயாரிப்பாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவிற்கு இந்தியாவின் மருந்துகள் ஆண்டு தோறும் 300 பில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மலிவு விலை ஜெனரிக் மருந்துகள் துறையில், அமெரிக்கா மிகப்பெரிய சந்தையாக உள்ளது. 2024ல் இந்தியா அமெரிக்காவிற்கு $3.6 பில்லியன் அதாவது 31,626 கோடி மதிப்புள்ள மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்தது. நடப்பு ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 32,505 கோடி மதிப்புள்ள மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இந்த சூழலில் டிரம்பின் 100% வரி விதிப்பு இந்திய மருந்து நிறுவனங்களின் வருவாயை பெரிதும் பாதிக்கலாம்.