கணவன் வீட்டாரை விசாரணைக்கு அழைத்து வரும் போலீஸ் Dowry Death | Family Protests | Tiruppur
திருப்பூர் கே.செட்டிபாளையத்தை சேர்ந்தவர் சுகந்தி. கணவர் இறந்துவிட்டார். இவரது மகள் ப்ரீத்தி. பி.பி.ஏ பட்டதாரி. இவருக்கு 2024, செப்டம்பர் மாதம் ஈரோட்டை சேர்ந்த சதீஸ்வர் என்பவருடன் திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது 120 சவரன் நகை, 25 லட்சம் ரூபாய் ரொக்கம், இன்னோவா கார் உள்ளிட்டவை வரதட்சணையாக கொடுக்கப்பட்டன.
கடந்த மாதம் 11ம் தேதி தாய் வீட்டுக்கு ப்ரீத்தி வந்தார். சின்னக்கரையில் உள்ள சாய ஆலையை, 1.10 கோடி ரூபாய்க்கு விற்றதன் மூலம், சுகந்திக்கு 50 லட்சம் ரூபாய் கிடைத்தது.
தகவலறிந்த ப்ரீத்தியின் கணவர், அவரை போனில் தொடர்பு கொண்டு, வீடு கட்டுவதற்காக, 50 லட்சம் ரூபாயை கேட்டுள்ளார்.
தனிக்குடித்தனம் சென்றால், பணத்தை வாங்கி வருகிறேன் என, கணவரிடம் ப்ரீத்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.