மக்கள் அம்னீசியாவில் இருந்து விடுபட வேண்டும் என வேதனை! | Draupadi Murmu | Kolkata doctor Case
கொல்கத்தா சம்பவத்துக்கு பொங்கி எழுந்த ஜனாதிபதி! கொல்கத்தா சம்பவம் குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியதாவது: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் டாக்டர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கேட்டு அதிர்ச்சியில் உறைந்தேன். பெண்களுக்கு எதிரான இதுபோன்ற தொடர் கொடூரங்கள் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. கொல்கத்தா டாக்டர் படுகொலையை கண்டித்து மாணவர்கள், டாக்டர்கள், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், குற்றவாளிகள் சுதந்திரமாக திரிகின்றனர். பிஞ்சுக்குழந்தைகள் கூட இது போன்ற கொடூரங்களுக்கு ஆளாகின்றன. நாகரிகமான சமுதாயம் தன் சகோதரிகள், மகள்கள் இது போன்ற கொடூரங்களுக்கு ஆளாவதை ஒருபோதும் சகித்துக் கொள்ளாது. கடந்த ஆண்டு மகளிர் தின வாழ்த்து செய்தியில், நம் நாட்டில் பெண்கள் முன்னேற்றம் குறித்து மிகவும் பாராட்டி என் மகிழ்ச்சியை பகிர்ந்திருந்தேன். ஒரு பெண்ணான நான் இந்நாட்டின் முதல் குடிமகளாக வந்ததை உதாரணமாக எண்ணி, பெண்கள் முன்னேற்றம் குறித்து எழுதியிருந்தேன். ஆனால், தற்போது நடந்த சம்பவங்களால் மிகவும் வருதப்படுகிறேன். ரக் ஷா பந்தன் நிகழ்ச்சியில் பங்கேற்ற பல குழந்தைகள், நிர்பயா சம்பவத்துக்கு முடிவுகட்ட நடவடிக்கை எடுப்பீர்களா என என்னிடம் கேள்வி எழுப்பினர்.