/ தினமலர் டிவி
/ பொது
/ லஞ்ச பணத்தில் செழித்த பெண் அதிகாரிகள்: பரபரப்பு தகவல் 3 women EB officers arrested bribe for comme
லஞ்ச பணத்தில் செழித்த பெண் அதிகாரிகள்: பரபரப்பு தகவல் 3 women EB officers arrested bribe for comme
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வின்டர்பேட்டை பகுதியில் மின் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. உதவி செயற்பொறியாளராக புனிதா 57, வணிக ஆய்வாளராக மோனிகா 33, ஃபோர்உமனாக பல்கிஸ் பேகம் 58 உள்ளனர். அம்மனூரை சேர்ந்த சரவணன் என்பவர், வீட்டின் பக்கத்தில் கடை வைத்துள்ளார். வீட்டு இணைப்பை வணிக இணைப்பாக மாற்றி தரக் கோரி உதவி செயற்பொறியாளர் புனிதாவிடம் விண்ணப்பித்தார். மின் இணைப்பை மாற்றி தர 3 அதிகாரிகளும் ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டனர். சரவணன், முதற்கட்டமாக, 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். மின் இணைப்பை மாற்றித் தந்ததும் எஞ்சிய 50 ஆயிரம் ரூபாயை கொடுப்பதாக சொன்னார்.
ஏப் 04, 2025