ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவான பயங்கர நிலநடுக்கம் | Earth Quake | Magnitude 7.3
அமெரிக்காவின் அலாஸ்கா நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அலாஸ்காவில் உள்ள சாண்ட் பாயிண்ட் தீவுக்கு 87 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம் 20 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு கடலோர அஸ்காவின் சில பகுதிகளுக்கு எச்சரிக்கை வெளியிட்டது. இரண்டு மணிநேர கண்காணிப்புக்கு பிறகு சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சிறிதளவிலான பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம், பொருள் சேதம் பற்றி அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக தககவல் வெளியிடவில்லை. அலாஸ்கா மாகாணம் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பசிபி வளையத்தில் அமைந்துள்ளது. அதிகபட்சமாக 1964ல் 9.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. கடந்த 2023 ஜூலையிலும் 7.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.