ரஷ்யா, ஜப்பான் அருகே 8.7 ரிக்டரில் அச்சுறுத்திய பூகம்பம் | Earthwuake | Russia | Japan | Tsunami war
ரஷியாவின் கம்சத்கா தீபகற்ப பகுதியில் அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 8.7 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. வீட்டில் உள்ள பொருட்கள் ஆட்டம் கண்டதால் மக்கள் பீதியடைந்த மக்கள் வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். 1.65 லட்சம் பேர் வசிக்கும் அவச்சா கடலோர நகரத்தில், கம்சாத்ஸ்கை நகரில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 125 கி.மீ. தொலைவில் 19.3 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் மையம் அறிவித்தது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் ரஷ்யா, ஜப்பான் கடலோர பகுதிகளுக்க சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. கம்சத்கா பகுதியில் 3 முதல் 4 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழுந்தன. அடுத்த 3 மணிநேரத்தில் தீவிர சுனாமி அலைகள் எழும்ப கூடும் என அமெரிக்காவும் எச்சரித்துள்ளது. பிலிப்பைன்ஸ், பலாவ், மார்ஷல் தீவுகள், சூக், கொஸ்ரே பகுதிகளில் ஒன்று முதல் 3.3 அடி உயரத்திற்கு சுனாமி அலைகள் எழும்ப கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.. ரஷ்யாவின் செவெரோ-குரில்ஸ்க், வடக்கு ஜப்பானின் கரைகளை சுனாமி அலைகள் தாக்கி உள்ளது. அங்குள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவின் அலாஸ்கா மற்றும் பசிபிக் கடற்கரை பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை இருப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தி உள்ளார் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.