/ தினமலர் டிவி
/ பொது
/ AI பிரசாரம் மூலம் பொய்களை பரப்பக்கூடாது ECI| Election Commission of India warning on Usages of AI
AI பிரசாரம் மூலம் பொய்களை பரப்பக்கூடாது ECI| Election Commission of India warning on Usages of AI
டில்லியில் அடுத்த மாதம் 5ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. ஆளும் ஆத்மி, காங்கிரஸ், பாஜ இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மூன்று கட்சிகளும் ஒன்றை ஒன்று கடுமையாக தாக்கி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு காலத்தில் மேடை பேச்சு, துண்டு சீட்டு வினியோகத்துடன் முடிந்த தேர்தல் பிரசாரங்கள் சமூக வலைதளங்களின் வருகையால் மேலும் விரிவடைந்துள்ளன. அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுக்கென ஐடி விங்கை ஏற்படுத்தி, சமூக வலைதலங்களில் பிரசாரம் செய்து வருகின்றன. இதன் மூலம் தாங்கள் சொல்ல விரும்பும் கருத்துக்களை வாக்காளர்களிடம் கொண்டு செல்வது எளிதாக உள்ளதாக அரசியல் கட்சிகள் கருதுகின்றன.
ஜன 16, 2025