சென்னையை உலுக்கிய ஈசிஆர் சம்பவம்: லேட்டஸ்ட் அப்டேட் | ECR Car Chase | Chennai ECR Womens Car
3 முறை ரிவர்ஸ் வரும் பெண்கள் கார் வெளியானது அடுத்த பகீர் காட்சிகள் சென்னை ஈசிஆர் ரோட்டில் முட்டுக்காடு அருகே நடுரோட்டில் காரை நிறுத்திய இளைஞர்கள் மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி இருக்கிறது. பெண்கள் சிலர் ஈசிஆர் ரோட்டில் காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அந்த காரை திமுக கொடி கட்டப்பட்ட காரில் வந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நடுரோட்டில் மறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் கூச்சலிட்டனர். திடீரென காரில் இருந்து இறங்கும் இளைஞர் ஒருவர் பெண்கள் பயணித்த காரை நோக்கி வேகமாக ஓடி வந்தார். உயிருக்கு பயந்து பெண்கள் காரை ரிவர்ஸ் எடுத்து வேகமாக மாற்று பாதையில் சென்றனர். ஆனாலும் பெண்கள் பயணித்த காரை பின் தொடர்ந்து வந்த அந்த கும்பல் மீண்டும் இடைமறித்துள்ளது. பெண்கள் தங்கள் உறவினர் வீடு அருகே வரும் வரை அந்த இளைஞர்கள் காரில் துரத்தி வந்துள்ளனர். வீட்டின் அருகே நின்று மிரட்டல் விடுக்கும் வகையில் எச்சரித்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பில் கானத்தூரை சேர்ந்த சன்னி திலாங் என்பவர் புகார் அளித்துள்ளார்.