உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமலாக்கத்துறையிடம் சிக்கப்போகும் அடுத்த அமைச்சர் | ED Raid | Alamgir Alam | Jharkhand raid cash

அமலாக்கத்துறையிடம் சிக்கப்போகும் அடுத்த அமைச்சர் | ED Raid | Alamgir Alam | Jharkhand raid cash

ஜார்க்கண்டில் முதல்வர் சம்பாய் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு ஊரக வளர்ச்சித் துறை முன்னாள் தலைமை பொறியாளர் வீரேந்திரா குமார் ராம், வருமானத்துக்கு அதிகமாக 100 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக வழக்கு பாய்ந்தது. சட்ட விரோத பணப் பரிமாற்றம் குறித்து அவர் மீது வழக்கு பதிந்த அமலாக்கத்துறை, வீரேந்திராவை கடந்த ஆண்டு பிப்ரவரியில் கைது செய்தது. அவரிடம் கைப்பற்றிய பென் டிரைவில், ஜார்க்கண்ட் அரசியல்வாதிகளுடன் நடந்த பணப்பரிமாற்ற தகவல்கள் இடம் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

மே 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ