உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எங்கெல்லாம் பணம் கை மாறியது? உருளும் புள்ளிகள் | ED Raid | KN Nehru | DMK

எங்கெல்லாம் பணம் கை மாறியது? உருளும் புள்ளிகள் | ED Raid | KN Nehru | DMK

தமிழக அமைச்சரவையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருப்பவர் நேரு. திமுக மூத்த தலைவர்களில் ஒருவர். பழுத்த அரசியல் அனுபவம் கொண்டவர். இவரது மகன் அருண் பெரம்பலூர் லோக்சபா தொகுதி எம்பியாக உள்ளார். நேருவுக்கு ரவிச்சந்திரன், மணிவண்ணன் என்று 2 சகோதரர்கள் உள்ளனர். இவர்களும் கட்டுமான தொழில், மின் உற்பத்தி நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன் அமைச்சர் நேரு, அவரது சகோதரர்கள், மகன் வீடு, அலுவலகம் என 15க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. காற்றாலை மின் நிறுவனத்துக்காக வாங்கப்பட்ட கடன் தொகை, மோசடியாக வேறு நிறுவனங்களின் வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டது தெரியவந்தது. இது குறித்து தொடர்ந்து 3 நாள் அமலாக்கதுறையினர் சோதனை நடத்தினர். சோதனை முடிவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனை அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

ஏப் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ