உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் ED ரெய்டு | Minister I,Periyasamy | ED raid | 11 HOURS ra

அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் ED ரெய்டு | Minister I,Periyasamy | ED raid | 11 HOURS ra

ஊரக வளர்ச்சி அமைச்சராக இருக்கும் ஐ.பெரியசாமி, 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் வீட்டுவசதி அமைச்சராக இருந்தார். அப்போது ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட்டுக்கு வீட்டு மனைக்காக ஒதுக்கிய இடத்தில் வணிக வளாகம் கட்டப்பட்டதாக புகார் எழுந்தது. இதற்காக ஜாபர் சேட் மனைவிக்கு வெளிநாட்டில் இருந்து சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கத்துறை வழக்கு பதிந்தது. இதுதொடர்பாக, அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில், திங்களன்று கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த சூழலில், திண்டுக்கல் கோவிந்தாபுரம் துரைராஜ் நகரில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீட்டில் இன்று அதிகாலை 6 மணி முதல் அமலாக்க அதிகாரிகள் திடீர் சோதனையில் இறங்கினர்.

ஆக 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !