பாரிஸ் ஈபிள் டவரில் தீ பற்றியதால் சுற்றுலா பயணிகள் வெளியேற்றம் | Eiffel tower | Fire | Tourists
பிரான்ஸ் தலைநகர் பாரிசின் மைய பகுதியில் அமைந்துள்ளது உலக புகழ்பெற்ற ஈபிள் டவர். பிரான்ஸ் நாட்டின் பெருமைமிகு சின்னமாக கருதப்படும் இந்த ஈபிள் டவரை பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கிறிஸ்துமஸ் சமயம் என்பதால் இப்போது ஒரு நாளைக்கு 15,000 முதல் 25,000 பேர் வரை பார்வையிடுகின்றனர். செவ்வாயன்றும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்த நேரத்தில் ஈபிள் டவரின் முதல் மற்றும் 2வது தளத்திற்கு இடையே லிப்ட்டில் திடீரென தீ பிடித்தது. உடனடியாக கட்டடத்தில் இருந்த 12 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டதால் காயமின்றி தப்பினர். விரைந்து வந்த தீயணைப்பு, மீட்பு படையினர் தீயை அணைத்தனர். லிஃப்ட்க்கு அருகில் உள்ள கேபிள்கள் அதிக ஹீட் ஆனதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த தீ விபத்து காரணமாக ஈபிள் டவர் பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.