உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இரு மாநில வனத்துறை கண்காணித்தும் பலனில்லை! | Elephant | Kovai | Forest department | Kovai Elephant

இரு மாநில வனத்துறை கண்காணித்தும் பலனில்லை! | Elephant | Kovai | Forest department | Kovai Elephant

கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான ஆனைகட்டி தமிழக - கேரள எல்லையில் அமைந்து உள்ளது. கேரள வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் இங்கு உலா வருவது வழக்கம். அப்படி வெளியேறிய மக்னா யானை ஒன்று ஒரு வாரமாக சுற்றி திரிந்தது. உடலில் பலத்த காயங்களுபன் இருந்த அந்த யானையை கவனித்த கூடப்பட்டி மலைவாழ் மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். பெரியநாயக்கன்பாளையம் வனத் துறையினர் யானைக்கு பழங்கள் மூலம் மருந்துகள் வைத்து சிகிச்சை அளித்தனர். ஆனால் அந்த யானை தமிழக வனப் பகுதிக்கும் கேரள வனப்பகுதிக்கும் மாறி, மாறி சென்றதால் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் தொடர்ந்தது.

அக் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !