/ தினமலர் டிவி
/ பொது
/ யானை தப்பும் காட்சிகள்; தேடும் பணி தீவிரம்! |elephant |elephant Rescued |Thondamuthur| Coimbatore
யானை தப்பும் காட்சிகள்; தேடும் பணி தீவிரம்! |elephant |elephant Rescued |Thondamuthur| Coimbatore
கோவை தொண்டாமுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் விவசாய பயிர்களை ரோலக்ஸ் என பெயரிடப்பட்ட காட்டு யானை சேதப்படுத்தி வந்தது. மக்களையும் அச்சுறுத்தி வந்ததால் இதன் அட்டகாசம் தாங்க முடியாமல் யானையை பிடித்து காட்டுக்குள் விட கோரிக்கை எழுந்தது. 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு 50 பேர் கொண்ட வன குழுவினர் கண்காணித்தனர். நேற்று இரவு கெம்பனூர் அருகே ஒருவர் தோட்டத்தில் முகாமிட்டு இருந்த யானையை கால்நடை மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்தினர். இரண்டில் ஒரு ஊசி மட்டுமே யானை மீது செலுத்தப்பட்டதாக தெரிகிறது. சுதாகரித்த ரோலக்ஸ் அங்கிருந்து வேகமாக தப்பி யானை மடுவு வனப்பகுதிக்குள் சென்று கூட்டத்துடன் சேர்ந்தது.
செப் 17, 2025