முன்னாள் அதிபர் பைடன் மீது எலான் மஸ்க் பகீர் குற்றச்சாட்டு Elon Musk | Attack | Biden Administratio
9 மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்த விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இன்று அதிகாலை பத்திரமாக பூமி திரும்பினர். அமெரிக்க தொழில் அதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி நிறுவனம், டிராகன் விண்கலத்தை அனுப்பி அவர்களை பத்திரமாக அழைத்து வந்தது. அவர்களை பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வந்ததற்காக ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் நாசா குழுவினருக்கு எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்தார். அழைத்து வரும் திட்டத்துக்கு முன்னுரிமை கொடுத்த அதிபர் டிரம்ப்புக்கு நன்றியும் சொன்னார். இது தொடர்பாக அவர் டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: விண்வெளியில் 8 நாள் இருந்திருக்க வேண்டியவர்கள் 9 மாதம் இருந்துள்ளனர். அவர்கள் விண்வெளியில் இருந்த சில மாதங்களிலேயே ஸ்பேஸ் எக்ஸ் அவர்களை பூமிக்கு அழைத்து வந்திருக்க முடியும். நாங்கள் அழைத்து வருகிறோம் என பைடன் நிர்வாகத்திடம் சொன்னோம். அதில் எந்த சந்தேகமும் இல்லை அரசியல் காரணங்களுக்காக அவர்கள் நிராகரித்தனர். இது உண்மை. பைடன் நிர்வாகத்தால் அவர்களை இவ்வளவு காலம் அங்கேயே விட்டுவைத்தது கொடுமை என எலான் மஸ்க் கூறினார்