உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கிராம சந்தைகள் தான் குறி; போலீசில் சிக்கியது எப்படி? fake currency note| erode family arrest

கிராம சந்தைகள் தான் குறி; போலீசில் சிக்கியது எப்படி? fake currency note| erode family arrest

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள திங்களூரில், வியாழன் தோறும் சந்தை நடைபெறுகிறது. இங்கு போலி ரூபாய் நோட்டுகள் புழங்குவதாக வியாபரிகள் சிலர் அளித்த புகாரையடுத்து, திங்களூர் போலீசார், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிலையில், சந்தைக்கு வந்த முதியவர், 500 ரூபாய் கொடுத்து பழங்கள் வாங்கினார். அவர் கொடுத்தது போலி ரூபாய் நோட்டு என்பதை அறிந்த வியாபாரி போலீசுக்கு தகவல் கொடுத்தார். முதியவரை பிடித்து போலீசார் விசாரித்ததில் உண்மை வெளிவந்தது. அவர் சத்தியமங்கலம், இக்கரைப்பள்ளியை சேர்ந்த ஜெயபால். அவரது மகன் ஜெயராஜ், போலி ரூபாய் நோட்டுகள் தயாரிப்பது எப்படி என இணையதள வீடியோக்கள் மூலம் பார்த்து, வீட்டிலேயே ஜெராக்ஸ் மிஷின் வைத்து 100, 200,500 ரூபாய் நோட்டுகளை அச்சடித்துள்ளார். சத்தியமங்கலம், கோபி, கொளப்பளூர், திங்களூர், பெருந்துறை போன்ற கிராம சந்தைகள் கூடும் இடங்களில் போலி பணத்தை புழக்கத்தில் விட்டுள்ளார்.

ஜூலை 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை