வகுப்பறையை கரும்புகை சூழ்ந்ததால் பரபரப்பு
அரியலூர் மாவட்டம் தேளூரில் அரச உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. நூற்றுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்குள்ள கம்ப்யூட்டர் ஆய்வகத்தில் மாணவர்கள் பயிற்சியில் இருந்தனர். அப்போது லேசாக ஒயர் கருகும் நாற்றம் வந்ததால் மாணவர்ள் வெளியேறினர். அடுத்த சில நிமிடங்களில் சில கம்யூட்டர்கள் அடுத்தடுத்து வெடித்தன. அதனால் ஏற்பட்ட கரும்புகை பக்கத்து வகுப்பறையையும் சூழ்ந்தது. அங்கிருந்தவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. தொடர்ந்து இருமலும் வந்தது. பாதிக்கப்பட்ட 24 மாணவ, மாணவிகள் உடனடியாக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டனர். சிகிச்சையில் இருந்தவர்களை கலெக்டர் ரத்தினசாமி, சந்தித்து விவரங்களை கேட்டறிந்தார். சிகிச்சைக்கு பின் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
ஆக 23, 2024