உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஒசூர் அருகே தோட்டத்து வீட்டில் இருந்தவர்களை தாக்கி நகை, பணம் கொள்ளை! Farm House | Theft Case | Arm

ஒசூர் அருகே தோட்டத்து வீட்டில் இருந்தவர்களை தாக்கி நகை, பணம் கொள்ளை! Farm House | Theft Case | Arm

ஒசூர் அருகே சஜ்ஜலபட்டியை சேர்ந்த வயதான தம்பதி ராஜா, கோவிந்தம்மாள். இவர்கள் தொட்டமெட்டறை கிராமம் அருகே விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வருகின்றனர். கிராமத்தில் இருந்து இவர்களது தோட்டம் 1 கிமீ தள்ளி உள்ளது. நேற்றிரவு கோவிந்தம்மாள், ராஜா, மருமகன் ராமச்சந்திரன், பேத்தி வர்ஷினி ஆகியோர் தோட்டத்து வீட்டில் இருந்தனர். இரவு 9 மணியளவில் காரில் முகமூடி அணிந்த 7 பேர் கும்பல் அங்கு வந்தது. வாசலில் நின்றிருந்த கோவிந்தம்மாளை ஒருவன் கத்தியை காட்டி மிரட்டி செயின், தோடு, தாலி உள்ளிட்ட எட்டரை பவுன் நகைகளை பறித்தான். மற்றவர்கள் வீட்டுக்குள் நுழைந்து பீரோவில் இருந்த 3.60 லட்ச ரூபாயை கொள்ளையடித்தனர்.

மே 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை