உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விவசாயிக்கு ஆதரவாக வெடித்தது போராட்டம் | Farmer wearing dhoti denied entry in Bengaluru's GT mall

விவசாயிக்கு ஆதரவாக வெடித்தது போராட்டம் | Farmer wearing dhoti denied entry in Bengaluru's GT mall

பெங்களூரு மாலில் விவசாயிக்கு அவமரியாதை பொங்கியெழுந்த பாஜ பெங்களுருவில் ஜிடி வேர்ல்ட் மால் என்ற பிரபல வணிக வளாகம் உள்ளது. ஜிடி மாலில் உள்ள திரையரங்குக்கு முதியவர் ஒருவர், தன் மகனுடன் படம் பார்க்க சென்றார். டிக்கெட் உடன் மால் உள்ளே செல்ல முயன்றபோது, பாதுகாவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். வேஷ்டி அணிந்து வருபவர்களை உள்ளே விடக்கூடாது என நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது: உங்களை அனுமதிக்க முடியாது பேன்ட் அணிந்து வந்தால் உள்ளே செல்லலாம் எனக்கூறி தந்தை மகனை பாதுகாவலர்கள் திருப்பி அனுப்பினர். மால் பாதுகாவலருடன் அவர்கள் கெஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. ஜிடி மாலுக்கு எதிராக பல தரப்பில் இருந்தும் கண்டனக்கணைகள் பறந்தன.

ஜூலை 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி