பாஜ பாணியில் விவசாயிகள் வீட்டிலேயே திடீர் போராட்டம் farmers protest trichy rail roko protest punjab
விவசாய பொருட்களுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்யக்கோரி பஞ்சாபில் போராடும் விவசாய சங்க தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதைக் கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு திருச்சி காவிரி ஆற்று பாலத்தில் நேற்று வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டம் நடத்தினார். ரயில் நடுவழியில் நின்றதால் போலீசார் விரைந்து சென்று மறியல் செய்த அய்யா கண்ணு உள்ளிட்ட விவசாயிகளை கைது செய்தனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்பதற்காக, திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள வீட்டில் அய்யாகண்ணு காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்பதற்காக போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பாஜவினர் நடத்திய கறுப்புக் கொடி போராட்டத்தைப்போல வீட்டிலிருந்தபடியே அய்யாகண்ணு திடீரென போராடினார். அதன்படி, விவசாயிகள் சங்கத் தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்த பஞ்சாப் முதல்வரை கண்டித்து அவரது உருவப்படத்தை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.