உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / யானைக்கூட்டத்தில் குட்டியை சேர்க்க வனத்துறை முயற்சி

யானைக்கூட்டத்தில் குட்டியை சேர்க்க வனத்துறை முயற்சி

கோவை மாவட்டம் துடியலூர், பன்னிமடை அருகே - வரப்பாளையத்தில் காப்பு காட்டில் இருந்து நேற்று யானைகள் வெளியேறின. வனத்துறையினர் மற்றும் ரோந்து குழுவினர் அந்த யானைகளை வனத்திற்குள் விரட்டினர். இன்று கூட்டத்தில் இருந்து பிரிந்த சுமார் ஒரு மாதமே ஆன யானைக்குட்டி தனியாக சுற்றித்திரிந்ததை பார்த்தனர். அந்த குட்டியை மீட்ட வனத்துறையினர், யானை கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியில் அங்கு தேடினர். அப்போது, அப்பகுதியில் பெண் யானை ஒன்று உட்கார்ந்த நிலையில் இறந்து கிடந்தது. அது அந்த குட்டியின் தாயாக இருக்கலாம் என வனத்துறையினர் சந்தேக்கின்றனர். மாவட்ட வன அதிகாரிகள், கால்நடை டாக்டர் உள்ளிட்டோர் ஸ்பாட்டிற்கு சென்று பார்த்தனர். கிரேன் உதவியுடன் பெண் யானையை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஏற்பட்டு செய்தனர் அதன் முடிவுகள் வந்த பின்னரே யானை இறப்புக்கான காரணம் தெரியும் என வனத்துறையினர் தெரிவித்தனர். தாயை இழந்த குட்டி யானையை அதன் கூட்டத்தில் சேர்க்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

டிச 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி