சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் | FIR Leak | Anna University Case | Pr
சமீபத்தில் சென்னை அண்ணா பல்கலையில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவி அளித்த புகாரின் படி திமுகவை சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் எப்ஐஆர் நகல் இணையத்தில் கசிந்தது. மாணவியின் விவரங்கள் வெளியானதால் பலரும் கண்டனம் தெரிவித்தனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எப்ஐஆர் பிளாக் செய்யப்படவில்லை என போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. போலீஸ் மீது பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளும் சரமாரியாக கேள்விகளை எழுப்பி இருந்தனர். எப்ஐஆர் லீக் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் விசாரணைக்கு அழைத்து 3 பத்திரிகையாளர்களின் செல்போன்களை சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக சென்னை பத்திரிகையாளர்கள் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.