ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடந்த அடுத்த பயங்கரம் | firecracker factory explosion
வெடித்து சிதறிய பட்டாசு ஆலை அறைக்குள் சிக்கிய தொழிலாளர்கள் நடுங்கிய கிராமம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மாயத்தேவன் பட்டி பகுதியில் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. 20க்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட இந்த பட்டாசு ஆலையில் நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் தங்கள் பணிகளை தொடங்கினர். லாரியிலிருந்து மூலப் பொருட்களை இறக்கிக் அதற்கான அறையில் அடுக்கிக் கொண்டிருந்தபோது ரசாயன கலவைகளில் ஏற்பட்ட உராய்வு காரணமாக ஏற்பட்ட வெடி விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று அறைகள் சேதமடைந்தது. மேலும் நாக பாளையத்தை சேர்ந்த புலி குட்டி, குன்னூரை சேர்ந்த கார்த்திக் என்கிற இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்தனர்