உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாம்பன் பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு: சுற்றுலா பயணிகள் அவதி|Fishers protest|Road blockTraffic

பாம்பன் பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு: சுற்றுலா பயணிகள் அவதி|Fishers protest|Road blockTraffic

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 9ம் தேதி 3 விசைப்படகுகளில் 23 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 23 மீனவர்களையும் நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். அவர்களின் 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். நேற்று ஊர்க்காவல் துறை கோர்ட்டில் 23 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவக்ரளை வருகிற 25-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 23 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சூழலில் இன்று காலை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ஒரு விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

நவ 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை