ரயில்வேயின் சுறுசுறுப்பு வியந்துபோன மக்கள் | Floodwaters washed away railway track Telangana
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இடைவிடாமல் கனமழை பெய்தது. ஆந்திராவில் பல மாவட்டங்கள் வெள்ளக்காடானது. தெலங்கானாவிலும் வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. பலத்த மழையால் இருமாநிலங்களிலும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. தெலங்கானாவில் மகபூபாபாத் மாவட்டத்தில் கெசமுத்ரம் என்ற பகுதியில் வெள்ளம் காட்டாறு போல பெருக்கெடுத்து ஓடியது. தண்டவாளத்தின் கிரிப்புக்காக போடப்பட்டிருந்த சரலைக்கற்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்துக்கு பின் எலும்புக்கூடு போல தண்டவாளம் காட்சியளித்தது. இன்று மழை விட்ட நிலையில், தண்டவாளத்தை சீரமைக்கும் பணியை ரயில்வே அதிகாரிகள் துரித கதியில் துவங்கி செய்து வருகின்றனர்.