உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பிரான்ஸில் உச்சகட்ட பதற்றம்: அரசுக்கு எதிராக திரளும் மக்கள் | France protests | French government

பிரான்ஸில் உச்சகட்ட பதற்றம்: அரசுக்கு எதிராக திரளும் மக்கள் | France protests | French government

பிரான்ஸ் நாட்டில் புதிய அரசாங்கம் பதவியேற்றதையடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த போராட்டங்களில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்கள் பொது போக்குவரத்து வாகனங்களை அடித்து நொறுக்கி தீ வைத்துள்ளனர். தலைநகர் பாரிஸ் உட்பட பல நகரங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது. மக்கள் கூட்டமாக கூடுவதை தடுத்த போலீசார், முன்னெச்சரிக்கை செய்து கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். நாட்டின் மேற்கு பகுதி நகரமான ரென்ஸ் நகரில் பஸ் ஒன்றுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். வின் வினியோக தொடர் அமைப்பு சேதப்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் பாதுகாப்பு பணியில் 80 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் புருனோ தெரிவித்துள்ளார். போராட்டத்துக்கு யாரும் தலைமை தாங்காமலேயே நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால் பிரான்ஸ் நாட்டில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்த போராட்டங்களுக்கு முக்கிய காரணம், அண்மையில் பிரான்ஸ் பிரதமராக இருந்த பைரூ (François Bayrou) நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததால் அவரது அரசு கவிழ்ந்ததுதான்.

செப் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை