ஏரியில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறும் பகீர் காட்சி | france helicopter crash video | morane 29 crash
பிரான்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் ரோஸ்போர்டன் சிட்டி அமைந்துள்ளது. அந்த பகுதியில் பற்றி எரிந்த காட்டு தீயை அணைக்க, ரோஸ்போர்டனில் உள்ள ஒரு ஏரியில் இருந்து ஹெலிகாப்டரில் தண்ணீர் எடுத்து சென்று ஊற்றினர். ராட்சத பக்கெட்டுடன் தண்ணீர் எடுக்க வந்த ஹெலிகாப்டர் என்று எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி வெடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏரியின் மேற்பரப்பில் மெல்ல இறங்கி வர வேண்டிய ஹெலிகாப்டர், சட்டென கீழே இறங்கியது. இதனால் ஜெலிகாப்டரின் ஸ்டாண்ட் மற்றும் வால் பகுதியில் ஏரி நீரில் மூழ்கியது. மறுகணமே பைலட் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர், தாறுமாறாக பறந்து நீருக்குள் மூழ்கி வெடித்தது. ஏரி கரையில் இருந்து ஒருவர் எடுத்த வீடியோவில் இந்த காட்சிகள் அப்படியே பதிவாகின. இந்த பயங்கர விபத்தில் ஒரே ஒரு ஆறுதலான விஷயம், ஹெலிகாப்டரில் இருந்த பைலட்டும், அவருடன் இருந்த அதிகாரியும் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினர். வீடியோ எடுத்த நபருக்கும் அதிர்ச்சியில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மூன்று பேருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஹெலிகாப்டர் விபத்தில் நல்ல வேளையாக உயிரிழப்பு இல்லை. ஏரி மாசடைவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று ரோஸ்போர்டன் நகரின் மேயர் தெரிவித்தார்.