உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நீங்க எத்தனை ஆண்டுகள் ஆகும்? | Gas Cylinder Shortage India |LPG Shortage

காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நீங்க எத்தனை ஆண்டுகள் ஆகும்? | Gas Cylinder Shortage India |LPG Shortage

ஈரான் - அமெரிக்கா போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவியது. ஈரான் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை அந்நாட்டு அரசு மூடியது. அந்த வழியாக சரக்கு கப்பல்கள் கடக்க சிக்கல் ஏற்பட்டது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கான கச்சா எண்ணெய், காஸ் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஈரானுடன் மத்திய அரசு பேச்சு நடத்தி, நமக்கான எரிபொருள் சப்ளை பாதிக்கப்படாமல் நடவடிக்கை எடுத்தது. மேலும் சில நாடுகளிடம் இருந்து எரிபொருள் வாங்கி நமக்கான தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எல்.பி.ஜி., தேவையில் 60 சதவீதம், இறக்குமதி வாயிலாகவே பெறப்படுகிறது. மேற்காசிய போருக்கு முன், எல்.பி.ஜி., இறக்குமதியில் 90 சதவிகிதம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே பெறப்பட்டது. தற்போது கப்பல்களுக்கு தடை மற்றும் வேறு இடங்களில் கொள்முதலால், இது 55 சதவிகிதமாக குறைந்துள்ளது இந்த நிலையில் சமையல் காஸ் சிலிண்டர் வினியோக தொடர் சீராக, 3 முதல் 4 ஆண்டுகள் ஆகலாம் என்கின்றனர் மூத்த அரசு அதிகாரிகள். மேற்காசிய போர் சூழலால் நாட்டின் எல்.பி.ஜி., வினியோகத்தொடரில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்டுள்ள எல்.பி.ஜி., வினியோகஸ்தர்களிடம் பேசியபோது, வினியோகத் தொடர் அமைப்பு சரியாக, குறைந்தது 3 அல்லது 4 ஆண்டுகள் ஆகலாம் என்று தெரிவித்துள்ளனர். உற்பத்தி பாதிப்பு தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்பது தெளிவாக தெரியவில்லை. இதன் விளைவாக இந்தியாவின் சமையல் எரிவாயு இறக்குமதி மற்றும் விலை மீதான அழுத்தம் அதிகரித்து வருகிறது. வீடுகளுக்கான எரிவாயு வினியோகத்துக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருவதுடன் பற்றாக்குறையை சமாளிக்க மாற்று வழிகளையும் ஆராய்ந்து வருகிறது. எரிவாயு வினியோக தடைகளை சமாளிக்க, கொரோனா காலகட்ட மாற்று ஏற்பாடுகள் தற்போது கைகொடுக்கும். இறக்குமதி செய்ய குறிப்பிட்ட நாட்டுக்கு பதிலாக, பல்வேறு நாடுகளை சார்ந்திருப்பது, மாற்று கடல் வழித்தடங்களை பயன்படுத்துவது, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது மாற்று வழிகள் என அவர்கள் தெரிவித்தனர். #GasCylinder #LPG #IndiaNews #BreakingNews #GasShortage #LPGCrisis #EnergyCrisis #PublicAlert #IndiaUpdate #FuelCrisis #NewsUpdate

ஏப் 16, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை