உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சுடு களிமண் சிற்பத்திற்கு கிடைத்த தங்கப் பதக்கம் | Gold medal for hot clay sculpture | Vilacheri

சுடு களிமண் சிற்பத்திற்கு கிடைத்த தங்கப் பதக்கம் | Gold medal for hot clay sculpture | Vilacheri

துரை விளாச்சேரியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் களி மண் பொம்மைகள் தயாரிக்கும் தொழிலில் பாரம்பரியமாக ஈடுபட்டு வருகின்றனர். சீசனுக்கு ஏற்ப சுவாமி சிலைகள், தலைவர்களின் சிலைகள், 3 இஞ்ச் முதல் 10 அடி உயர விநாயகர் சிலைகள் மற்றும் இரண்டரை அடி உயர மெகா சைஸ் அகல் விளக்குகள், நவராத்திரி கொலு பொம்மைகள், கிறிஸ்துமஸ் குடில்கள் ஆகியவற்றை செய்து வருகின்றனா். இந்த சிலைகளை களிமண், காகிதக் கூழ், பிளாஸ்டர் ஆப் பாரிஸ், சிமென்ட் ஆகியவற்றை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கின்றனர். இவை தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது, தமிழக அரசு கைத்திறன் வளர்ச்சி கழகம் பூம்புகார் சார்பில் மாநில அளவிலான 14 வகையான கைவினைப் பொருட்களுக்கான போட்டியை சென்னையில் நடந்தது. அதில் சுடு களிமண் சிற்ப பிரிவில் மதுரை விளாச்சேரி கைவினைக் கலைஞர் ஹரி கிருஷ்ணன் தயாரித்த யானை மீது அமர்ந்த நிலையில் அய்யனார் சுடு களிமண் சிற்பம் சிறந்த தாக தேர்வு செய்யப்பட்டு சிறந்த கலைஞர் விருது வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு 50 ஆயிரம் ரூபாய் மற்றும் 4 கிராம் தங்கப் பதக்கத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

செப் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி