தமிழ் சினிமா பிரபலங்கள் அஞ்சலி
தமிழ் சினிமாவில் மூத்த காமெடி நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 67 சில ஆண்டுகளாகவே சாந்தியின் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்துள்ளார். அவரது உடல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சத்தியராஜ், செந்தில், வையாபுரி, இயக்குநர் ரவிக்குமார் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் நண்பர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் சாந்தி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் கோலூச்சியவர் கவுண்டமணி. செந்திலுடன் இவர் செய்த காமெடி காட்சிகள் காலம் கலந்தும் இன்றும் பிரபலமானவை. இப்போதும் சில படங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் காதலர்களுக்கு உதவும் கதாபாத்திரங்களில் நடித்து பாராட்டு பெற்ற கவுண்டமணி, நிஜத்திலும் காதல் திருமணம் செய்து கொண்டார். கவுண்டமணி-சாந்தி சம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.