உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நாப்கின் மெஷினால் வந்த வினை: மொத்த ஆஸ்பிடலும் பீதி | Government Hospital | DINDIGUL

நாப்கின் மெஷினால் வந்த வினை: மொத்த ஆஸ்பிடலும் பீதி | Government Hospital | DINDIGUL

திண்டுக்கல் நகரின் மத்தியில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். 5 தளங்களை கொண்ட இந்த மருத்துவமனையில் இன்று காலை 2வது தளத்தில் இருந்து புகை வந்துள்ளது. அதனை கண்டு நோயாளிகளின் உறவினர்கள் கூச்சலிட்டபடி ஓடினர். இந்த தகவல் மெல்ல மெல்ல அனைத்து தளங்களில் இருந்தவர்களுக்கும் பரவியது. பிரசவ வார்டில் இருந்த பெண்கள் குழந்தைகளை தூக்கிக்கொண்டு ஓடி வந்தனர். மருத்துவமனையை விட்டு வெளியேறி நுழைவு கதவு முன் தஞ்சமடைந்தனர். கையில் குளுக்கோஸ் போடும் ஊசியுடன் செய்வதறியாது தவித்து நின்றனர்.

ஜூலை 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ