/ தினமலர் டிவி
/ பொது
/ நள்ளிரவில் டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் ஊழியர்கள் ஷாக் | government hospital Thiruthani
நள்ளிரவில் டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் ஊழியர்கள் ஷாக் | government hospital Thiruthani
திருத்தணியில் 45 கோடி மதிப்பீட்டில் தலைமை அரசு மருத்துவமனையை சென்ற ஏப்ரலில் முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார். ஆனால் கட்டடம் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்படாமல் இருந்தது. மக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று சென்ற வாரம் இரண்டாவது தளம் வரை பணிகள் முடிந்து செயல்பட தொடங்கியது. இந்த சூழலில் நேற்று நள்ளிரவு திடீரென டிரான்ஸ்பார்மர் பழுதாகி மின்சாரம் தடைபட்டது. ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் கொண்டு வந்தனர். டீசல் இல்லாததால் ஜெனரேட்டரும் ஓடாமல் நின்றது. மூன்றரை மணி நேரம் மின்சாரம் இல்லாமல் நோயாளிகள் அவதி அடைந்தனர்.
ஜூலை 17, 2025