உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகத்தில் குழந்தை பிறப்பு சரிவு? கல்வித்துறை பகீர் ரிப்போர்ட் |Government School |Birth Rate TN

தமிழகத்தில் குழந்தை பிறப்பு சரிவு? கல்வித்துறை பகீர் ரிப்போர்ட் |Government School |Birth Rate TN

தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்ததால் 208 பள்ளிகள் மூடப்படுகின்றன என்கிற தகவல் வெளியானது. மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க, அரசு பள்ளிகளில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் பள்ளிகள் மூடப்படுவதற்கான காரணம் குறித்து பள்ளிக்கல்வி துறை இயக்குனர் கண்ணப்பன் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில், 58 ஆயிரத்து 924 பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் 1 கோடியே 21 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். 5 லட்சத்து, 34 ஆயிரத்து 799 ஆசிரியர்கள் உள்ளனர். இதில் 208 அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள், 114 அரசு உதவி பெறும் பள்ளிகள், 11 பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகள், 869 சுயநிதி பள்ளிகள், இரு மத்திய பாடத்திட்ட பள்ளிகள் என, மொத்தம், 1,204 பள்ளிகளில், சேர்க்கை நடக்கவில்லை . தனியார் பள்ளிகளில் 72 சதவீதம், மற்ற பள்ளிகளில் 28 சதவீதம் மாணவர் சேர்க்கை நடக்கவில்லை. இதற்கு, தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும், குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவதே முக்கிய காரணம். அரசு, தனியார் பள்ளி என்ற பாகுபாடு காரணமல்ல. அதாவது, 2011ல், 1 வயதுக்குள்ளான குழந்தைகளின் எண்ணிக்கை, 10.74 லட்சமாக இருந்த நிலையில், 2016ல், 10.45 லட்சமாகவும், 2021ல் 9.53 லட்சமாகவும் குறைந்துள்ளது. அடுத்த ஆண்டில், 8.78 லட்சமாக குறையும் என, 2020ல் வெளியிடப் பட்ட மத்திய மக்கள் தொகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆக 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !