/ தினமலர் டிவி
/ பொது
/ தரமான கல்விக்கு ஒரு ஊரே ஏங்கி நிற்கும் சோகம் TVK Govt | Puthupatti TNDTA School | Minister Rajmohan
தரமான கல்விக்கு ஒரு ஊரே ஏங்கி நிற்கும் சோகம் TVK Govt | Puthupatti TNDTA School | Minister Rajmohan
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் புதுப்பட்டியில் TNDTA அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளி உள்ளது. தமிழகத்தில் இப்படியும் ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறதா என்று வேதனையை வர வைக்கும் பள்ளிக்கூடம் இது. காரணம், இந்த பள்ளியில் மொத்தமே ஒரே ஒரு மாணவி தான் படிக்கிறார். அவரும் 5-ம் வகுப்பு. அதாவது, கடைசி 4 ஆண்டுகளாக ஒரு மாணவர் கூட பள்ளியில் புதிதாக சேரவில்லை. இந்த மாணவியும் சென்று விட்டால், பள்ளிக்கு மூடு விழா தான். இப்போது, ஒரு மாணவிக்கு பாடம் எடுக்க 2 ஆசிரியர்கள். ஒருவர் தலைமை ஆசிரியை மேரி. இன்னொருவர் ஆசிரியர் ஜீவா.
ஜூலை 03, 2026