உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 1974ம் ஆண்டில் நடந்த தவறு திமுக செய்த பெரிய பாவம் Governor r.n.ravi dmk government congress central

1974ம் ஆண்டில் நடந்த தவறு திமுக செய்த பெரிய பாவம் Governor r.n.ravi dmk government congress central

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க வேண்டும், தடைபட்டுள்ள இருநாட்டு மீனவர் பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் மூன்றாவது நாளாக மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமேஸ்வரம் அடுத்த செம்மமடம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மனோலயா மனநல காப்பகத்தை திறந்து வைக்க காரில் சென்ற கவர்னர் ரவி மீனவர்கள் போராட்டம் பற்றி அறிந்தார். நேராக உண்ணாவிரத பந்தலுக்கு சென்றார். போராட்டத்துக்கு வந்த கவர்னரை மீனவர்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

மார் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ