தமிழக பாடத்திட்டம் பற்றி கவர்னர் ரவி பகிரங்க குற்றச்சாட்டு | GOVERNOR RAVI | UDHAYANITHI | DMK | BJP
சென்னை கவர்னர் மாளிகையில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடந்த எண்ணித்துணிக நிகழ்ச்சியில் கவர்னர் ரவி கலந்துரையாடினார். தமிழகம் கல்வியில் சிறந்து விளங்க அடித்தளம் அமைத்தவர் காமராஜர். துரதிருஷ்டவசமாக அந்த அடித்தளம் இன்று பலவீனமாகி உள்ளது. அரசு பள்ளிகளில் கல்வித்தரம் மிகவும் கீழே சென்றுள்ளது. தேசிய சராசரியை விட அது குறைவாக உள்ளது. அரசு பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 75 சதவீதத்தினரால் இரட்டை இலக்க எண்களைக்கூட புரிந்து கொள்ள முடியவில்லை. 40 சதவீத மாணவர்களால் அவர்களது பாட புத்தகங்களை கூட படிக்க முடியவ்ல்லை என ஆய்வு தெரிவிக்கிறது. கற்பித்தல் குறைபாடே இதற்கு காரணம் எனவும் கவர்னர் ரவி சொன்னார். இதற்கு பதிலளித்து பேசிய விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி, உலகின் தலைசிறந்த மருத்துவர்கள் தமிழகத்தில் படித்தவர்கள் தான் என்றார்.