உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோரிக்கைகள் நிறைவேறாததால் விரக்தியின் உச்சியில் அரசு ஊழியர்கள் | Govt staffs | Jacto jeo | DMK | TN

கோரிக்கைகள் நிறைவேறாததால் விரக்தியின் உச்சியில் அரசு ஊழியர்கள் | Govt staffs | Jacto jeo | DMK | TN

கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தப்போவதாக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு மற்றும் பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் அறிவித்தன. பழைய ஓய்வூதிய திட்டம், ஊதிய உயர்வு, ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு முன் வைக்கின்றனர். கடந்த 10ம் தேதி ஜாக்டோ ஜியோ மாவட்ட அளவில் வேலை நிறுத்த போராட்ட ஆயத்த மாநாடு நடத்தியது. 15ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தையும் அறிவித்தது. அதற்கு முந்தைய நாள் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை முதல்வர் ஸ்டாலின் அழைத்து பேசினார். அதன் பிறகு பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவதற்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில் வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவித்தனர். இது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை சோசியல் மீடியாவில் வெளிப்படுத்தி வருகின்றனர். போர்க்களத்தில் நிற்கும்போது புறமுதுகிட்டு ஓடுவது வெறுப்பாக உள்ளதாக கூறும் அவர்கள், அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக தேர்தல் சார்ந்த புள்ளி விவரங்களையம் வெளியிடுகின்றனர்.

பிப் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை