கிழக்கு ஆசிய நாடுகளில் ஜனாதிபதிக்கு கவுரவம் Great honour for Droupadi Murmu | Timor-Leste
ஜனாதிபதி திரவுபதி முர்மு அரசுமுறை பயணமாக பிஜி, நியூசிலாந்து மற்றும் திமோர் லெஸ்டே Timor-Leste நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றார். பிஜி நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதை ஜனாதிபதி முர்முவுக்கு வழங்கி அந்நாட்டு அரசு கவுரவித்தது. டிமூர் - லெஸ்டே நாட்டிற்கு சென்ற முர்முவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு அதிபர் Jose Ramos- Horta ஜோஸ் ரமோஸ் ஹர்டா வரவேற்றார். அந்நாட்டிற்கு சென்ற முதல் இந்திய தலைவர் என்ற பெருமையை முர்மு பெற்றார். இரு நாட்டு உறவுகள் குறித்து தலைவர்கள் பேச்சு நடத்தினர். திமோர் லெஸ்டே நாட்டின் மிக உயரிய விருதான ஆர்டர் ஆப் திமோர் விருது ஜனாதிபதி முர்முவுக்கு வழங்கப்பட்டது. விருது பெற்ற ஜனாதிபதி முர்முவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு இந்த விருது கிடைத்திருப்பது ஒட்டுமொத்த தேசத்திற்கான கவுரவம் எனவும் மோடி புகழ்ந்துள்ளார்.