தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கு ஒப்பந்தம் Tuticorin Port Development| sonowal inaug
தூத்துக்குடி துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மையத்தை மத்திய கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சர் சர்பானந்த சோனாவால் தொடங்கி வைத்தார். அத்துடன் 350 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். breath பின் பேட்டி கொடுத்த அமைச்சர் சர்பானந்த சோனாவால், தூத்துக்குடி துறைமுகத்தில் பல முக்கிய திட்டங்கள் தொடங்கப்பட்டதன் மூலம், புதிய இலக்குகளை அடைந்துள்ளதாக தெரிவித்தார். பிரதமர் மோடி தலைமையிலான 11 ஆண்டுகால ஆட்சியில் கப்பல் மற்றும் நீர்வழி துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில் சென்னை, எண்ணூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மூன்று முக்கிய துறைமுகங்களில் சாகர்மாலா திட்டத்தில் 93 ஆயிரத்து 750 கோடி ரூபாய் செலவில் 98 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் 50 சதவீத திட்டங்கள் ஏற்கனவே முடிந்து விட்டன. கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தின் இந்த 3 துறைமுகங்களின் வளர்ச்சிக்கு சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தில் 14ஆயிரம் கோடி செலவில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மையம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இன்று தமிழக அரசுடன் இணைந்து கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. 2030க்குள் இந்திய உலகளவில் கப்பல் கட்டுவதில் டாப் 10 நாடுகளுக்குள் இந்தியா இருக்கும். 2047 க்குள் டாப் 5 நாடுகளுக்குள் இருக்கும். அதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. துறைமுகங்களின் உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் உலகத்தரம் வாய்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்று மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் கூறினார். #TuticorinPortDevelopment #SonowalInaugurates #GreenHydrogenProject #NewTerminal #WindEnergyFacility #CleanEnergy #CoastalDevelopment #ShipBuildin