உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நடப்பு நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் 8.6 சதவீதம் அதிகரிப்பு GST Collection December 2025.

நடப்பு நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் 8.6 சதவீதம் அதிகரிப்பு GST Collection December 2025.

நடப்பு நிதியாண்டில் டிசம்பர் வரை 16.5 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளது. இது, கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 8.6 சதவீதம் அதிகம். கடந்த டிசம்பரில் மட்டும் மொத்த ஜிஎஸ்டி வசூல் 1.74 லட்சம் கோடி ரூபாய். இது, 2024 டிசம்பரில் வசூல் ஆன 1.64 லட்சம் கோடியை விட 6.1 சதவீதம் அதிகம். SGST, CGST வரி வசூல் அதிகரித்து இருந்தாலும் IGST எனப்படும் மாநிலங்களுக்கு இடையேயான பரிவர்த்தனை வரி 1.2 சதவீதம் மட்டுமே கூடுதலாக கிடைத்துள்ளது. கடந்த செப்டம்பரில் ஜிஎஸ்டியில் சீர்திருத்தம் கொண்டு வந்தது. சுமார் 375 பொருட்களின் வரி குறைக்கப்பட்டது. அதன் காரணமாக ஐஜிஎஸ்டி வருவாய் அதிகரிப்பு குறைந்திருக்கிறது. அதே சமயம் இறக்குமதி பொருட்களில் இருந்து வரும் ஜிஎஸ்டி வரி வசூல் 51 ஆயிரத்து 977 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது 2024 டிசம்பரை காட்டிலும் 19.7 சதவீதம் அதிகம்.

ஜன 01, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி