தென்மாவட்ட மக்கள் சொந்த ஊருக்கு படையெடுப்பு | GST Road | heavy traffic jam
சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள், பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு கிளம்புகின்றனர். இதனால் வெளியூர் செல்லும் ரயில்கள் மற்றும் பஸ்கள் ஃபுல்லாக செல்கின்றன. சொந்த வாகனங்களிலும் மக்கள் ஊருக்கு புறப்பட துவங்கியுள்ளனர். இதனால் பல்லாவரத்தில் இருந்து தாம்பரம் வரையிலான ஜிஎஸ்டி சாலையில் இன்று மாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு மேலாக வாகனங்கள் அப்படியே ஜாம் ஆகி நின்றன. மெதுவாக ஊர்ந்து சென்றன.
 ஜன 10, 2025