கிண்டி ஜிஎஸ்டி சாலையில் அணிவகுத்த வாகனங்கள்
சென்னை கிண்டி பஸ் ஸ்டாண்ட் அருகில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. காலை மாலை நேரங்களில் கிண்டியில் இருந்து நந்தம்பாக்கம், போரூர் வரை செல்லும் ரோடு கடும் போக்குவரத்தால் ஸ்தம்பிக்கிறது. பணிக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆமை வேகத்தில் நடந்த பணிகள் திடீரென நிறுத்தப்பட்டது. பாதுகாப்புக்காக வைக்கப்பட்ட பேரிகார்டுகளால் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெலிபோன் கேபிள் பதிக்கும் பணியும் நடந்து வருவதால் போக்குவரத்து நெரிசல் மிக மோசமாகியுள்ளது. வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகி்னறனர். போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போதிய டிராபிக் போலீசாரும் இல்லாததால் கிண்டியில் இருந்து நந்தம்பாக்கம் வரை 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுப்பது வாடிக்கையாக உள்ளது. விரைந்து பணிகளை முடிக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.