உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கிண்டி கான்ஸ்டபிள் ஆயுதப்படைக்கு மாற்றம்! | Guindy constable | DSP Sundaresan

கிண்டி கான்ஸ்டபிள் ஆயுதப்படைக்கு மாற்றம்! | Guindy constable | DSP Sundaresan

மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் சில நாட்களுக்கு முன் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து சென்ற காட்சி வைரலானது. காழ்புணர்ச்சியால் அவரது கார் பறிக்கப்பட்டதாகவும், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் பேட்டி அளித்தார். தஞ்சை மண்டல டிஐஜி ஜியாவுல் ஹக் மயிலாடுதுறை எஸ்பி ஸ்டாலின் உட்பட 9 பேரிடம் விசாரணை நடத்தினார். சுந்தரேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இன்று அவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இந்த சூழலில் அவருக்கு ஆதரவாக கிண்டி போலீஸ் ஸ்டேஷன் கான்ஸ்டபிள் செல்வம் வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். இதுவரை 12 இன்ஸ்பெக்டருக்கு டிரைவராக இருந்துள்ளேன். 2009ல் இருந்து 2012 வரை சுந்தரேசன் ஜே5 சாஸ்திரி நகர் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருந்தார். அப்போது அவரிடம் நான் டிரைவராக இருந்தேன். அவர் நேர்மையானவர் உண்மையானவர். அவர் கையூட்டல் பெறுவது கிடையவே கிடையாது. உண்மை ஜெயிக்கும் என உணர்ச்சி பொங்க பேசி இருந்தார். வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்த சூழலில் கான்ஸ்டபிள் செல்வத்தை ஆயுதப்படைக்கு மாற்றி சென்னை போலீஸ் உத்தரவிட்டு உள்ளது. யூனிபார்மில் விதி மீறி செயல்பட்டதாக கூறி அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ஜூலை 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை