கும்மிடிப்பூண்டி அருகே சரிக்கப்பட்ட 6 பேர்: அதிர்ச்சி சம்பவம் | Gummidipoondi
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ராமச்சந்திராபுரத்தில் அரசு குடியிருப்பு உள்ளது. சென்னை திருவொற்றியூர் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 2 வருடங்களுக்கு முன் இங்கே குடியமர்த்தப்பட்டனர். இவர்களில் சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. நேற்று இரவு கொத்தனார் ஹரி என்பவர் ராமச்சந்திராபுரம் அரசு குடியிருப்பு பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு தேவராஜ் தலைமையில் கூடியிருந்த சிலர் ஹரியை மிரட்டியுள்ளனர். அவரை தாக்கி செல்போனை பறித்ததாக கூறப்படுகிறது. அரிவாளை காட்டியும் மிரட்டியுள்ளனர். எதிர்த்து கேள்வி கெட்ட ஹரியை கும்பல் அரிவாளால் வெட்டி இருக்கிறது. லேசான காயங்களுடன் அங்கிருந்து தப்பிய அவர் தனது உறவினர்களிடம் நடந்த சம்பவத்தை கூறி இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த ஹரியின் குடும்பத்தினர் அரசு குடியிருப்பு பகுதிக்கு திரண்டு சென்று அவரை தாக்கிய தேவராஜ் கும்பலை தட்டி கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. ஹரியின் உறவினர்களையும், தேவராஜ் கும்பல் அரிவாள், கத்தியால் தாக்கியது.