உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஹவாலா பணம் யாருடையது? சிக்கியவர்களிடம் விசாரணை | hawala money | Viluppuram

ஹவாலா பணம் யாருடையது? சிக்கியவர்களிடம் விசாரணை | hawala money | Viluppuram

பஸ் ஸ்டாண்டில் ₹1.60 கோடி பணத்துடன் பிடிபட்ட 4 பேர்! விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த 4 பேர் மீது சந்தேகப்பட்டு விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பதில் கூறி உள்ளனர். அவர்கள் வைத்திருந்த பையை போலீசார் திறந்து பார்த்தபோது, கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தன. 4 பேரையும் விழுப்புரம் தாலுக்கா போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அவர்களது பையில் 1 கோடியே 60 லட்சம் ரூபாய் இருந்தது. அது ஹவாலா பணம் என்பதும், சென்னையில் இருந்து திருச்சிக்கு கொண்டு செல்ல இருந்ததும் தெரிந்தது. அந்த பணத்திற்கான ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது.

ஜன 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை